சீன வெளியுறவுத்துறை மந்திரி பாகிஸ்தான் பயணம்


சீன வெளியுறவுத்துறை மந்திரி பாகிஸ்தான் பயணம்
x

Image Courtesy : AFP

பாகிஸ்தானுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவுத்துறை மந்திரி குயின் கேங் சென்றுள்ளார்.

பீஜிங்,

சீன நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி குயின் கேங் அலுவலக முறை பயணமாக நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் அவர் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையில் ஆழமான தொடர்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான சாலை வரைபடத்தை உருவாக்கி உலகளாவிய நிலப்பரப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.


Next Story