ஜப்பான் கடலில் நீண்ட தூர பயிற்சியில் சீன நாசகார போர்க்கப்பல்


ஜப்பான் கடலில் நீண்ட தூர பயிற்சியில் சீன நாசகார போர்க்கப்பல்
x

கோப்புப்படம் 

ஜப்பான் கடலில் சீன நாசகார போர்க்கப்பல் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

பீஜிங்,

சீன நாட்டின் நாசகார போர்க்கப்பல் லாசா. இந்த கப்பல் கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது சீனாவின் மிகப்பெரிய, திறன்மிக்க போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.

இந்த கப்பல், ஜப்பான் கடலில் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீன கடற்படையின் வரம்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சி அமையும் என சீன கம்யூனிஸ்டு கட்சி நாளிதழ் 'குளோபல் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படுகிற முதல் பயிற்சி இதுதான் என தகவல்கள் கூறுகின்றன. இந்த கப்பலுடன் செங்டு நாசகார போர் கப்பலும், டாங்பிங்கு கப்பலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.


Next Story