நெதர்லாந்து: விமானங்களை மறித்து போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்


நெதர்லாந்து: விமானங்களை மறித்து போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
x

நெதர்லாந்து விமான நிலையத்தில் விமானங்களை மறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆம்ஸ்டர்டாம்,

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்தால் ஏற்பாடும் மாசுபாட்டை கண்டித்து அங்குள்ள ஷிபோல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறைவான விமானங்கள், அதிக ரெயில்கள் என்கிற தலைப்பில் அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நெதர்லாந்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஷிபோல் விமான நிலையம் இருப்பதாக குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் குறுகிய தூர விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் விமானநிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்து தனியார் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிக்கு சென்றனர்.

பின்னர் அங்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானங்கள் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் பல தனியார் விமானங்கள் புறப்படுவதை அவர்கள் தடுத்து நிறுத்தனர். இதையடுத்து விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமானங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story