ஊழல் குற்றச்சாட்டு - ஜோ பைடன் மீதான விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்


ஊழல் குற்றச்சாட்டு - ஜோ பைடன் மீதான விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
x
தினத்தந்தி 15 Dec 2023 4:39 AM GMT (Updated: 15 Dec 2023 5:01 AM GMT)

ஜோ பைடன் மீதான பதவிநீக்க தீர்மானம் குறித்த விசாரணை நடத்த சபாநாயகர் மைக் ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் ரூ.11 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது பதவியை பயன்படுத்தி ஹண்டர் பைடன் ஆதாயம் பெற்றதாகவும், அதனை ஜோ பைடன் தடுக்க தவறியதாகவும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டினை ஜோ பைடன் மறுத்துள்ளார்.

இந்தநிலையில் ஜோ பைடனை பதவி நீக்கம் செய்ய கோரி குடியரசு கட்சியினர் வலியுறுத்தினர். இதற்காக நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவேறியது. எனவே ஜோ பைடன் மீதான பதவிநீக்க தீர்மானம் குறித்த விசாரணைக்கு சபாநாயகர் மைக் ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தீர்மானத்தை ஜனநாயக கட்சியினர் ஆதரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும் பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பின்னர் செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கும் இந்த தீர்மானம் நிறைவேறினால் ஜோ பைடன் பதவி இழக்க நேரிடும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஜோ பைடன் மீதான இந்த விசாரணையை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாக கவனித்து வரு கின்றனர்.


Next Story