சட்ட விரோதமாக ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை


சட்ட விரோதமாக ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 15 Sep 2023 9:20 PM GMT (Updated: 16 Sep 2023 6:26 AM GMT)

ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ஹவானா,

உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளான சீன, வடகொரியா போன்றவை செயல்படுகின்றன.

இந்தநிலையில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அந்த நாட்டின் தூதர் ஜூலியோ அன்டோனியோ கார்மென்டியா பெனா கூறுகையில், `கியூபா நாட்டவர்கள் ரஷிய ராணுவத்தில் சட்டப்பூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் இந்த நெருக்கடியை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கின்றனர். எனவே இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது' என தெரிவித்தார்.


Next Story