மோக்கா புயலால் மியான்மரில் கடும் பாதிப்பு - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக உயர்வு


மோக்கா புயலால் மியான்மரில் கடும் பாதிப்பு - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக உயர்வு
x

Image Courtesy : AFP

மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

டாக்கா,

வங்க கடலில் உருவான 'மோக்கா' புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது.

புயல் கரையை கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. புயல் கரையக் கடந்த நிலையில், அங்கு மீட்பு பணிகளை அங்குள்ள நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.

இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story