டெல்லி-சான் பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமான என்ஜினில் கோளாறு; ரஷியாவில் தரையிறக்கம்


டெல்லி-சான் பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமான என்ஜினில் கோளாறு; ரஷியாவில் தரையிறக்கம்
x

டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, ரஷியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

மகதன்,

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது.

இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்து உள்ளனர். இந்நிலையில், விமானத்தில் என்ஜின்களில் ஒன்று திடீரென பழுதடைந்து உள்ளது என கூறப்படுகிறது.

இதனால், ரஷியாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ரஷியாவின் மகதன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர், பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

அவர்கள் சென்று சேரவேண்டிய இடத்திற்கு விரைவாக செல்வதற்கான மாற்று வழிகளையும் செய்து தருவோம். விமானத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறியுள்ளார்.


Next Story