பல்வேறு தாக்குதல்களுக்கு மத்தியில் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவியாக பொருட்களை அனுப்பி வரும் இஸ்ரேல்


பல்வேறு தாக்குதல்களுக்கு மத்தியில் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவியாக பொருட்களை அனுப்பி வரும் இஸ்ரேல்
x

பல்வேறு தாக்குதல்களுக்கு மத்தியிலும் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

டெல் அவிவ்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய நகரங்கள் மீது நான்கு ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

பல்வேறு தாக்குதல்களுக்கு மத்தியிலும் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்த உதவி கரீம் ஷாலோம் கிராசிங் வழியாக அனுப்பப்படுகிறது. கரேம் ஷாலோம் கிராசிங் போஸ்ட் பகுதியானது இஸ்ரேல்-காசா எல்லை சந்திப்பில் உள்ளது, அங்கிருந்து காசா பகுதிக்கு உணவு, எண்ணெய், சமையல் எரிவாயு, மருந்துகள் மற்றும் பழங்கள் போன்ற மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுப்புகிறது.

இது குறித்து ஷாலோம் கிராசிங் பகுதியில் இயக்குனர் ஆக உள்ள அமி ஷேக் கூறுகையில், காசாவில் நாங்கள் உதவியை அனுப்பவில்லை என்றால், அங்குள்ள மக்கள் வேறு எந்த வழியிலும் உதவி பெறுவது கடினம். அங்குள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அவர்களின் தேவைக்காக நாங்கள் பல பொருட்களை வழங்குகிறோம்.

ஆனால் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தாக்குதல்களால் வரும் ராக்கெட்டுகள் மற்றும் ஆயுதங்கள் எங்கள் பிராந்தியத்தில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. துன்பங்கள் இருந்தபோதிலும், ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை நமது வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவுகிறார்கள்.

காசாவுக்கு வேறு வழியில்லை என்பது எங்களுக்குத் தெரியும், அங்குள்ள மக்களுக்கு உதவ வேறு எந்த நாடும் முன்வரவில்லை. காசா பகுதியில் உள்ள மக்களின் தேவையை நாங்கள் புரிந்து கொண்டதால், நாங்கள் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.


Next Story