லண்டனில் பாகிஸ்தான் பெண் மந்திரியை திருடி, திருடி என வெறுப்பேற்றிய எதிர்ப்பாளர்கள்


லண்டனில் பாகிஸ்தான் பெண் மந்திரியை திருடி, திருடி என வெறுப்பேற்றிய எதிர்ப்பாளர்கள்
x

லண்டனில் பாகிஸ்தான் பெண் மந்திரியை திருடி, திருடி என கூறி வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து அவரை வெறுப்பேற்றி உள்ளனர்.லண்டன்,பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் தகவல் துறை மந்திரியாக இருப்பவர் மரியும் அவுரங்கசீப். பெண் மந்திரியான இவர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் ஆவார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்கு சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள், அவரை சூழ்ந்து கொண்டு விமர்சிக்க தொடங்கினர். எனினும், அவர்களை கண்டு கொள்ளாமல் மரியும், தனது மொபைல் போனில் தன்னுடைய வேலையில் ஆழ்ந்து ஈடுபட்டார்.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும், 3.3 கோடி பேர் நிவாரணம் தேடி அலையும் சூழலிலும் தள்ளப்பட்டு உள்ளனர். இதில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் கூட பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசில் காணப்படும் ஊழலை பற்றி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதுபற்றிய பிரதமரின் ஆடியோ உரையாடல் ஒன்றும் கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுவும், அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், லண்டனுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பெண் மந்திரிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தெருவில் மரியும் நடந்து செல்லும்போது, அவரை பின்தொடர்ந்த வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள், அவரை திருடி, திருடி என கூறி கூச்சலிட்டனர்.

இதுபற்றி வெளியான வீடியோ ஒன்றில் பேசிய பெண் ஒருவர், பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் பெரிய விசயங்களை எல்லாம் பேசிய மரியும், லண்டனில் தனது தலையில் துப்பட்டாவை கூட போட்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மரியும், இம்ரான் கானின் வெறுப்பு மற்றும் பிரிவினைக்கான அரசியல் நம்முடைய சகோதர, சகோதரிகளிடையே நஞ்சாக பாதித்து உள்ளது, காண்பதற்கு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

தி டான் வெளியிட்டுள்ள செய்தியில், மரியும் நிலைமையை நன்றாக எதிர்கொண்டார் என அவருக்கு பாகிஸ்தானிய மந்திரிகள் ஆதரது தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களால், மரியும் தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார் என அந்த பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.


Next Story