இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கேட்டு மருத்துவர்கள் போராட்டம்.!


இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கேட்டு மருத்துவர்கள் போராட்டம்.!
x

இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

லண்டன்,

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த சுமுக முடிவு எட்டப்படாததால், பல்லாயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

5 நாள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றிலேயே ஒரு மிக நீண்ட வேலை நிறுத்தமாக இது அமையும். இன்று காலை 7 மணிக்கு தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கிய அவர்கள் 35% ஊதிய உயர்வுக்காக போராடுகிறார்கள். இந்த மருத்துவரகள் அனைவரும் மருத்துவ படிப்பை முடித்து தங்கள் மருத்துவ பணியின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளநிலை மருத்துவர்களின் இந்த 5 நாள் வெளிநடப்பு, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நோயாளிகளின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.


Next Story