உக்ரைனில் செர்னோபில் அணுஉலை விபத்து போல இன்னொரு தாக்குதல் நிகழக்கூடாது: துருக்கி அதிபர் எர்டோகன்


உக்ரைனில் செர்னோபில் அணுஉலை விபத்து போல இன்னொரு தாக்குதல் நிகழக்கூடாது: துருக்கி அதிபர் எர்டோகன்
x

Image Credit:Reuters

ரஷியா ஜாபோரிஜியா அணு ஆலையில் தாக்குதலை நடத்த உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

கீவ்,

ரஷியப் படைகள் கடந்த மார்ச் மாதத்தில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஜாபோரிஜியா அணு ஆலையைக் கைப்பற்றின. இதன் காரணமாக, அதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை அணுசக்தி விபத்து பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது.

ரஷியா ஜாபோரிஜியா அணு ஆலையில் தாக்குதலை நடத்த உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இதனை ரஷியா மறுத்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார்.

அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

கிழக்கு உக்ரைனின் லீவ் நகரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் பேசுகையில்:-

"செர்னோபில் அணுஉலை விபத்து போல இன்னொரு தாக்குதல் நிகழக்கூடாது. உக்ரைனுக்கு ஒரு உறுதியான கூட்டாளியாக துருக்கி இருக்கிறது.

ரஷியா உக்ரைன் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடரும்போது, நாங்கள் எங்கள் உக்ரைன் நண்பர்களின் பக்கம் இருக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

"அணு ஆலையின் நிலைமை குறித்து தான் தீவிர அக்கறையுடன் இருப்பதாகவும், அது இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்.

கிழக்கு உக்ரைனில் உள்ள ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்படுவது தற்கொலைக்கு சமம்" என்று ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.

இந்த நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் அவர்கள் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், பின்னர் பார்க்கலாம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.


Next Story