நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு


நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
x

நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

காத்மண்டு,

நேபாளத்தில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

கடந்த 3-ந்தேதி நேபாளத்தின் மேற்கு பகுதியில் இதேபோன்றதொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் டெல்லி-என்.சி.ஆர். பகுதியிலும் உணரப்பட்டு இருந்தது.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி, அச்சாம், பஜுரா மற்றும் சூடூர் பச்சிம் மாகாணத்திற்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால், மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு தப்பியோடினர். இதில், சில வீடுகள் முழுவதுமோ அல்லது பகுதியாகவோ இடிந்து விழுந்தன என தகவல்கள் தெரிவித்தன.


Next Story