நேபாளத்தில் நிலநடுக்கம்.! உத்தரகாண்டிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்


நேபாளத்தில் நிலநடுக்கம்.! உத்தரகாண்டிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 7 Oct 2023 7:27 AM GMT (Updated: 7 Oct 2023 8:03 AM GMT)

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், உத்தரகாண்டிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காத்மாண்டு,

நேபாள நாட்டில் இன்று காலை 11 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கமானது ஹால்ட்வாணி பகுதியில் இருந்து வடகிழக்கில் 39 கி.மீ தூரத்தில், 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நில அதிர்வானது உத்தரகாண்ட் மாநில பகுதியிலும், டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே கடந்த 3ஆம் தேதி நேபாளத்தின் இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story