ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு


ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
x

ஈக்வடார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

குயிடோ,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவால் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், நிலச்சரிவில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இதில் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Related Tags :
Next Story