புதிய சட்டத்தால் அதிருப்தி.. ஐரோப்பாவில் எக்ஸ் சேவையை நிறுத்த எலான் மஸ்க் பரிசீலனை


புதிய சட்டத்தால் அதிருப்தி.. ஐரோப்பாவில் எக்ஸ் சேவையை நிறுத்த எலான் மஸ்க் பரிசீலனை
x
தினத்தந்தி 19 Oct 2023 7:39 AM GMT (Updated: 20 Oct 2023 2:04 PM GMT)

புதிய சட்டத்தால் அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், ஐரோப்பாவில் எக்ஸ் சேவையை நிறுத்த பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை கொண்டு வந்தது. தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவுவதை தடுப்பது, சில பயனர் நடைமுறைகளை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது, சில தரவுகளை கட்டுப்பாட்டு அமைப்புடன் பகிர்வது போன்ற விதிகள் இந்த சட்டத்தில் உள்ளன.

இந்த சட்டத்தால் அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், ஐரோப்பாவில் தனது எக்ஸ் வலைதள சேவையை நிறுத்த பரிசீலனை செய்வதாக செய்தி தளமான இன்சைடர் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸ் செயலி கிடைக்காத வகையில் இருப்பை அகற்றுவது அல்லது பயனர்கள் பயன்படுத்த முடியாத வகையில் பிளாக் செய்வது குறித்து மஸ்க் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


Next Story