டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை குறைத்த எலான் மஸ்க்..!


டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை குறைத்த எலான் மஸ்க்..!
x

டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை 14 நாட்கள் குறைத்து அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு மாற்றத்தை எலான் மஸ்க் செய்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு 20 வாரங்களாக இருந்தது. அதை 2 வாரங்களாக எலான் மஸ்க் குறைத்து உத்தரவிட்டுள்ளார். அதாவது 140 நாட்களில் இருந்து வெறும் 14 நாட்களாக விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக டுவிட்டரில் பயனர் ஒருவர் கூறும்போது, "டுவிட்டரில் அவமானம். இரண்டு வாரங்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு? இது சரியான வழி இல்லை" என்றார். இதேபோல்மற்ற பயனர்கள் கூறும்போது, "திவால் நிலையை எதிர்கொள்ளும் ஒரு நிறுவனம் மட்டுமே இதை செய்யும். இது குழந்தைகளை பெறாமல் இருந்த உங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும்" என்றனர்.


Next Story