ஈரானில் ராணுவ தளவாட மையத்தில் வெடி விபத்து - 2 பேர் உடல் சிதறி பலி


ஈரானில் ராணுவ தளவாட மையத்தில் வெடி விபத்து - 2 பேர் உடல் சிதறி பலி
x

வெடிகுண்டுகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது விபத்து நேரிட்டது.

டெஹ்ரான்,

ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள செம்மான் மாகாணம் டம்கான் நகரில் ராணுவ தளவாட மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த மையத்தில் வெடிகுண்டுகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. இதில் 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


Next Story