இந்தியர்களை பலி கொண்ட தீ விபத்து: குவைத்தை சேர்ந்தவர் உள்பட பலர் கைது


இந்தியர்களை பலி கொண்ட தீ விபத்து: குவைத்தை சேர்ந்தவர் உள்பட பலர் கைது
x

தீ விபத்து தொடர்பாக குவைத் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

குவைத் சிட்டி,

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியானார்கள். 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக குவைத் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அந்தவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காரணமாக மனிதக் கொலை மற்றும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குவைத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் பல்வேறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story