பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் முதல்-மந்திரி தகுதி நீக்கம்


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் முதல்-மந்திரி தகுதி நீக்கம்
x

கோப்புப்படம்

போலி பட்டப்படிப்பு வழக்கில் கில்கிட்-பால்டிஸ்தானின் முதல்-மந்திரியை பால்டிஸ்தான் ஐகோர்ட்டு தகுதி நீக்கம் செய்தது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வருகிறது. எனினும், அதனை இந்தியா ஏற்கவில்லை. இந்த நிலையில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் முதல்-மந்திரியாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த காலித் குர்ஷித் கான் இருந்து வந்தார்.

இவர் போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை கொண்டு கில்கிட்-பால்டிஸ்தான் பார் கவுன்சிலில் இருந்து வக்கீல் பயிற்சிக்கான உரிமம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குலாம் ஷாஜாத் ஆகா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று 3 நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காலித் குர்ஷித் கான் போலியான சட்ட பட்டம் மூலம் வக்கீல் பயிற்சிக்கு உரிமம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story