ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர்களை தாக்கிய சுறா மீன்: கடற்கரை உடனடியாக மூடல்


ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர்களை தாக்கிய சுறா மீன்: கடற்கரை உடனடியாக மூடல்
x

ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர்களை சுறா மீன் ஒன்று தாக்கியதால், அந்த கடற்கரை உடனடியாக மூடப்பட்டது.

கான்பெரா,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மத்திய-வடக்கு கடற்கரை அருகே மெக்குவாரி என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. இங்கு சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த ராட்சத சுறா மீன் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை தாக்கியது. இதனையடுத்து படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இந்தநிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சவுத்வேல்ஸ் மாகாண கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்காக அங்கு குளிக்க தடை விதித்து எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மறு அறிவிப்புக்கு பிறகு இந்த கடற்கரை திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story