அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணி படுகாயம் - குழந்தை இறந்த சோகம்


அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணி படுகாயம் - குழந்தை இறந்த சோகம்
x

கோப்புப்படம் 

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நிறைமாத கர்ப்பிணி படுகாயம் அடைந்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் ஹோலியோக் நகரில் உள்ள சாலையோரம் நின்று நண்பர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் அந்த வழியாக பஸ்சில் சென்ற ஒரு நிறைமாத கர்ப்பிணி படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்து போனது. இதற்கிடையே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story