பிரேசிலில் கனமழை: வெள்ளம், நில சரிவுக்கு பலி 56 ஆக உயர்வு


பிரேசிலில் கனமழை:  வெள்ளம், நில சரிவுக்கு பலி 56 ஆக உயர்வு
x

பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நில சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 56 பேரை காணவில்லை.

ரியோ டி ஜெனீரோ,

பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின.

வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் மற்றும் நில சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நகரில் 30 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை முன்னிட்டு அந்த நகருக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனரோ இன்று நேரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்.

வெள்ள பாதிப்புகளால் அருகேயுள்ள அலகோவாஸ் மாகாணத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 7 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்து உள்ளனர். பெர்னாம்புகோ மாகாணத்தின் 9 நகராட்சி பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் நெருக்கடி நிலையை அறிவித்து உள்ளனர்.


Next Story