தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி…வினோத சம்பவம்..!

சில அறிவியல் மற்றும் சில சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயங்கள் இப்போது சாதாரணமாகி வருகின்றன.
கலிபோர்னியா,
சொந்த சகோதரனின் குழந்தையை வயிற்றில் சுமந்து அதனை பெற்றெடுத்துள்ளார் சகோதரி ஒருவர். இன்னும் தனது சகோதரனின் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வினோத சம்பவம் நடந்தது எப்படி?
இன்று உலகில் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. முன்பு மனிதர்கள் சிறிய விஷயங்களைக் கூட சாத்தியமற்றதாகக் கருதினார்கள், இப்போது பெரிய விஷயங்கள் கூட சாத்தியமாகின்றன. சில அறிவியல் மற்றும் சில சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயங்கள் இப்போது சாதாரணமாகி வருகின்றன. சகோதரி ஒருவர் தனது சகோதரனின் மகனைப் பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல இதழான டெய்லி ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் சப்ரினா. 30 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில்,அவரது சகோதரர் ஷான் பெட்ரியின் ஆண் குழந்தையை சப்ரினா பெற்றெடுத்துள்ளார்.
அதாவது ஷான் பெட்ரி ஓரின சேர்க்கையாளராக இருந்து வருகிறார். அவர்,பால் என்ற ஆணை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஷான் பெட்ரியின் குழந்தையை சப்ரினா தனது வயிற்றில் வளர்த்து பெற்றெடுத்துள்ளார்.
அதாவது ஷான் பெட்ரியின் விந்தணுவை சரோகேசி (Surrogacy) முறையை பயன்படுத்தி குழந்தை பெறப்பட்டுள்ளது. உயிரியல் ரீதியில் இது ஷான் பெட்ரியின் குழந்தையாக அமைந்துள்ளது.






