தான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்


தான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x

இந்தியா மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவானது கடந்த 2022-ம் ஆண்டு ரூ.52,900 கோடி என்ற அளவில் இருந்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தர் எஸ் சலாம்,

இந்தியாவில் இருந்து தான்சானியா நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அந்நாட்டின் தர் எஸ் சலாம் நகரில் இந்திய வம்சாவளியினர் கூடியிருந்த திரளான கூட்டத்தின் முன்பு உரையாற்றினார்.

அப்போது அவர், நான் ஐ.டி. (இந்தியா-தான்சானியா) சிறப்பு பணியை செய்வதற்காக தான்சானியா நாட்டுக்கு வந்துள்ளேன். இந்த பணியின்படி, இந்த நாட்டில் இன்று காணப்படும் சில முக்கிய முன்னுரிமை வாய்ந்த விசயங்கள் பற்றி பேசப்படும் என கூறினார்.

இந்த உரையின்போது, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயும் வலிமையான உறவு உள்ளது என அவர் சுட்டி காட்டி பேசினார். காலனி ஆட்சியின்போது நமது பகிரப்பட்ட சுதந்திர போராட்டமும் அதன் ஒரு பகுதியாகும். அதனுடன், கிழக்கு ஆப்பிரிக்காவுடனும் நாம் ஒரு குறிப்பிடும்படியாக நெருங்கிய இணைப்பை கொண்டுள்ளோம். அதனுடன், இந்தியாவின் சில பகுதிகள் நெருங்கிய தொடர்புடையனவாக உள்ளன என்றும் அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு நேற்று பேசினார். அப்போது அவர், தான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளும் பாரம்பரிய முறையிலான நெருங்கிய மற்றும் நட்புறவுகளை கொண்டாடுகின்றன. நம்மிடையே, அரசியல் ரீதியிலான நல்ல முறையிலான புரிதலை நாம் கொண்டிருக்கிறோம். சீராக நாம் உயர்மட்ட பயணங்களை மேற்கொள்கிறோம்.

அவற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரதமர் மோடியின் பயணமும் அடங்கும். பொருளாதார உறவுகளை எடுத்து கொண்டால் உண்மையில், மக்களுடன் மக்கள் மிக விரிவான, ஆழம் வாய்ந்த தொடர்புகளை நாம் கொண்டிருக்கிறோம் என பேசியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவானது கடந்த ஆண்டு ரூ.52,900 கோடி என்ற அளவில் இருந்தது. 2020, 2021 ஆகிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இதேபோன்று காணப்பட்டது என அவர் கூறியுள்ளார்.


Next Story