சர்வதேச நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியா செயல்படுகிறது - பியூஷ் கோயல்


சர்வதேச நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியா செயல்படுகிறது - பியூஷ் கோயல்
x

பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்திய-அமெரிக்க கூட்டுமுயற்சி மாநாடு மற்றும் இந்தோ- பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

முன்னதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பியூஷ் கோயல், அமெரிக்காவில் 6 பகுதிகளில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை (ஐ.சி.ஏ.ஐ) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்கள் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்று லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது;-

"இந்தியாவும், அமெரிக்காவும் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய கூட்டணி உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது.

சர்வதேச நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியா செயல்படுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story