அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீண்டும் தேர்வு


அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீண்டும் தேர்வு
x

கோப்புப்படம்

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

டுப்ளின்,

அயர்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை பதவி வகித்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர். 38 வயதில் பிரதமர் ஆனது மூலம் அயர்லாந்தின் இளம் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன் கேல் கட்சி பியனா பெயில் மற்றும் பசுமை கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதில் லியோ வரத்கர் துணைப் பிரதமராகவும், தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரியாகவும் பணியாற்றினார்.

முன்னதாக கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 2022 டிசம்பர் வரை பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் பிரதமராகவும், அதன் பிறகு அரசின் எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் லியோ வரத்கர் பிரதமராக இருப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி லியோ வரத்கரை புதிய பிரதமராக தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தது.

இதில் 87 உறுப்பினர்கள் லியோ வரத்கர் பிரதமராவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 62 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் லியோ வரத்கர் மீண்டும் அயர்லாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லியோ வரத்கர் ஓரினசேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story