அமெரிக்க ராணுவ தளம் மீதான தாக்குதலில் ஈரான் பங்கேற்கவில்லை-ஐ.நா.சபையில் ஈரான் தூதர் பேச்சு


அமெரிக்க ராணுவ தளம் மீதான தாக்குதலில் ஈரான் பங்கேற்கவில்லை-ஐ.நா.சபையில் ஈரான் தூதர் பேச்சு
x

பாலஸ்தீனத்துக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது.

டெஹ்ரான்,

சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. இவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவம் சிரியாவுக்கு பல்வேறு உதவிகளை செய்கிறது. அதன் ஒருபகுதியாக அமெரிக்கா தனது ராணுவ தளங்களை சிரியாவில் நிறுவி உள்ளது. இதன்மூலம் சிரிய ராணுவ வீரர்களுக்கு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே பாலஸ்தீனத்துக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இதனால் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அமெரிக்க ராணுவதளம் மீது கடந்த இரு வாரங்களில் 46 தாக்குதல்களை நடத்தினர். எனவே ஈரானுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

இதனையடுத்து அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்தநிலையில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களில் ஈரான் பங்கேற்கவில்லை என ஐ.நா. சபையில் ஈரான் நாட்டுக்கான நிரந்தர தூதர் அமீர் சயீத் இரவானி பேசினார்.Next Story