யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம் அதிகரித்த ஈரான்


யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம் அதிகரித்த ஈரான்
x

Image Courtesy : AFP

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கி உள்ளது.

தெஹ்ரான்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டும் பணியை போா்டோ சுரங்க அணு சக்தி மையத்தில் தொடங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.

1 More update

Next Story