ஈரான்: போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் திடீர் தீ விபத்து; 32 பேர் பலி


ஈரான்:  போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் திடீர் தீ விபத்து; 32 பேர் பலி
x

ஈரானில், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் லாங்கிரவுடு நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தெஹ்ரான்,

ஈரானின் காஸ்பியன் கடல் பகுதியையொட்டிய கிலான் மாகாணத்தில் போதை பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், திடீரென இந்த மையத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி காலை 6 மணிக்கு முன் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஈரான் வயர் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள லாங்கிரவுடு நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story