இஸ்ரேல் போரை தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கும்: பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை


இஸ்ரேல் போரை தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கும்:  பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2023 12:18 AM GMT (Updated: 10 Oct 2023 12:26 AM GMT)

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. போரானது எங்கள் மீது கொடூர மற்றும் வன்முறையான வழியில் திணிக்கப்பட்டு உள்ளது. இந்த போரை இஸ்ரேல் தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 2,300 இஸ்ரேல் மக்கள் காயமடைந்து உள்ளனர்.

இதற்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் விலை கொடுப்பார்கள் என்றும் அதனை நீண்ட காலத்திற்கு அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்றும் நேதன்யாகு கூறியுள்ளார்.


Next Story