பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் - 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் பலி


பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் - 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் பலி
x

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

காசா,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் இந்த மோதல் தீவிரம் அடைந்தது.

அதேபோல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் பாலஸ்தீனிய ஆயுத குழுக்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடைேய அடிக்கடி மோதல் நடக்கிறது. இதில் இரு தரப்பினரும் அவ்வப்போது வான்வழி தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்பு

அதன் ஒருபகுதியாக பாலஸ்தீனத்தில் உள்ள காசா முனையை ஆட்சி செய்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த வாரம் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர். அதனை பயங்கரவாத அமைப்பாக கருதும் இஸ்ரேல் அவர்களது முகாம்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றன.

எனவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக சந்தேகிக்கப்படும் பாலஸ்தீனியர்களை தடுத்து வைக்க பல மாதங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சில சமயம் இதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் துயர சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

டிரோன் தாக்குதல்

அந்த வகையில் பாலஸ்தீனத்தின் காசாமுனை அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை அங்குள்ள ரபா நகரில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, `இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் உரிய விலை கொடுக்க நேரிடும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story