சிரியா எல்லையில் பதற்றம்: இஸ்ரேல்-லெபனான் இடையே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்


சிரியா எல்லையில் பதற்றம்: இஸ்ரேல்-லெபனான் இடையே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்
x

Image Courtesy: AFP

ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீரென டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவமும் டிரோன் தாக்குதலை நடத்தியது.

லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் லெபனானுக்கு சொந்தமாக கபர் சவுபா நகரம் உள்ளது. இங்கு இஸ்ரேல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலை நடத்துகின்றனர்.

இந்தநிலையில் கபர் சவுபா நகரில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவமும் தொடர்ந்து 2 டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.


Next Story