ஜப்பானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி


ஜப்பானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி
x

Image Courtesy : AFP 

ஜப்பான் நாட்டில் முதல் முறையாக இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ,

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோயால் தற்போது 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் முதல் முறையாக டோக்கியோவில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் 30 வயதிற்குட்பட்டவர் எனவும் அவர் ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்த போது அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த ஆண்டு இதுவரை 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன் குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story