நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்?


நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்?
x
தினத்தந்தி 19 Jan 2024 4:56 PM GMT (Updated: 19 Jan 2024 5:14 PM GMT)

ஸ்லிம் விண்கலத்தின் நேரடி ஒளிபரப்பு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பு வரை காத்திருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் பார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) விண்கலம் நிலவில் தரையிறங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.

முன்னதாக ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது. தற்போது லேண்டர் தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனிடையே ஸ்லிம் விண்கலத்தின் நேரடி ஒளிபரப்பு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் செய்தியாளர் சந்திப்பு வரை காத்திருக்குமாறும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story