'ஜோ பைடன் 3-ம் உலகப்போரை நோக்கி அமெரிக்காவை அழைத்துச் செல்வார்' - டிரம்ப் விமர்சனம்


ஜோ பைடன் 3-ம் உலகப்போரை நோக்கி அமெரிக்காவை அழைத்துச் செல்வார் - டிரம்ப் விமர்சனம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:25 AM GMT (Updated: 31 Aug 2023 6:31 AM GMT)

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செயல்பாடுகள் நாட்டை 3-ம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார். இதனிடையே அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில், "நேர்மையற்றவரான ஜோ பைடன் முட்டாள் மட்டுமல்ல, திறமை இல்லாதவரும் கூட. நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எல்லைகளை திறந்துவிட்டதன் மூலம், அப்பட்டமான வெறிப்பிடித்தவரான அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கிறேன். அவரது மனநிலையை இழந்தவராக நாட்டை நரகத்தை நோக்கி நகர்த்தி, ஒரு காரணமும் இல்லாமல் அமெரிக்க மக்கள் மீது 3-வது உலகப்போரை திணித்து விடுவார்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.


Next Story