அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை- கிம் ஜாங் உன்

Image courtesy: AFP
அணு ஆயுதங்களை "தானாகவே" பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது.
பியாங்யாங்,
போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை "தானாகவே" பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்த சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என தெரிவித்தார். மேலும் நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என கிம் உறுதியாக தெரிவித்துள்ளார்.
வடகொரியா தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் "பேரழிவு நெருக்கடியை" தடுக்க அணுகுண்டுகளைப் தானாக பயன்படுத்தலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
அமெரிக்காவுடன் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் தென் கொரியாவின் திட்டம் குறித்து கிம் ஜாங் உன் விமர்சித்தார். தென் கொரியாவின் நடவடிக்கை வடகொரியாவிற்கு ஆபத்தானது என்று அவர் தெரிவித்தார்.






