தாய்லாந்தில் மகா பூஜை தினம்: புத்த கோவிலில் ஏற்றப்பட்ட 1 லட்சம் லாந்தர் விளக்குகள்


தாய்லாந்தில் மகா பூஜை தினம்: புத்த கோவிலில் ஏற்றப்பட்ட 1 லட்சம் லாந்தர் விளக்குகள்
x

தாய்லாந்து நாட்டில் பதும் தானி நகரில் உள்ள புத்த கோவிலில், 1 லட்சம் லாந்தர் விளக்குகள் ஏற்றப்பட்டன.

பாங்காக்,

தாய்லாந்து, கம்போடியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 'மகா பூஜை' அல்லது 'மஹா புச்சா' என்ற புத்த சமய பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புத்த பகவான் தனது 1,200 சீடர்களை சந்தித்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக இந்த தினத்தை புத்த மதத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

மகா பூஜையின் போது புத்த கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது, தியானம் மேற்கொள்வது, புத்தரின் போதனைகளை கேட்பது, தானம் வழங்குவது உள்ளிட்ட செயல்களை புத்த மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஆண்டு நேற்றைய தினம் மகா பூஜை தினம் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தாய்லாந்து நாட்டில் பதும் தானி நகரில் உள்ள புத்த கோவிலில், 1 லட்சம் லாந்தர் விளக்குகள் ஏற்றப்பட்டன. பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த புத்த துறவிகள் இந்த கோவிலுக்கு வருகை தந்து லாந்தர் விளக்குகளை ஏற்றினர். ஒரு லட்சம் லாந்தர் விளக்குகளுடன் புத்த கோவில் மிளிர்ந்தது, காண்போரை கவரும் வகையில் அமைந்தது.



Next Story