மலேசியாவில் நவம்பர் 19-ந் தேதி பொதுத் தேர்தல்


மலேசியாவில் நவம்பர் 19-ந் தேதி பொதுத் தேர்தல்
x

மலேசியாவில் நவம்பர் 19-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

கோலாலம்பூர்,

மலேசியாவில் 2020-ம் ஆண்டு பிரதமராக இருந்த மகாதிர் முகமது பதவி விலகினார். அதையடுத்து அதே ஆண்டின் மார்ச் 1-ந் தேதி முகைதீன் யாசின் பிரதமர் பதவிக்கு வந்தார். ஆனால் அவருக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவை திரும்பப்பெற்றதால், பதவி விலகினார்.அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி இஸ்மாயில் சப்ரி யாக்கூப் பிரதமர் ஆனார்.

ஆனாலும் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. இதனால் கடந்த 10-ந் தேதி பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், புதிதாக தேர்தல் நடத்த வசதியாக மலேசிய நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இந்த நிலையில் அங்கு நவம்பர் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் வருகிற 5-ந் தேதி தொடங்கும் என்று தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல் கானி சலே அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலுக்காக 3 லட்சத்து 63 ஆயிரத்து 515 பணியாளர்கள், 8,958 வாக்கு மையங்களில் பணியாற்றுவார்கள். அங்கு 2 கோடியே 11 லட்சத்து 73 ஆயிரத்து 638 வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.


Next Story