இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்த மாலத்தீவு


இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்த மாலத்தீவு
x

கோப்புப்படம்

சீன உளவு கப்பல் மாலத்தீவு வருவதால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

மலே,

இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி சீனா மாலத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அண்மையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே 20-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், 'சியாங் யாங் ஹாங் 3' என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாகவும், அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாகம் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சீன உளவு கப்பலை தங்கள் நாட்டின் துறைமுகத்தில் நிறுத்த மாலத்தீவு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதலுக்காக மாலத்தீவு துறைமுகத்தில் தங்களது கப்பலை நிறுத்த சீனாவிடம் இருந்து தூதரக ரீதியாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று சீன கப்பலை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாலத்தீவு கடற்பகுதியில் இருக்கும்போது சீன கப்பல் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன உளவு கப்பல் மாலத்தீவு வருவதால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story