ஒரே விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்த நபர்


ஒரே விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்த நபர்
x

image tweeted by @GWR

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர் என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர் என்பவர், தன் ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.

ஒற்றை விராலால் அதிக எடையை தூக்கி கின்னஸ் சாதனை படைத்தது குறித்து ஸ்டீவ் கீலர் கூறும்பீது, "இது நம்பமுடியாத அளவிற்கு வேதனையானது. ஆனால் என் விரல்கள் வலுவாக உள்ளன. மேலும் எனது வலிமை குறித்து நான் பெருமைப்படுகிறேன்" என்று ஸ்டீவ் கூறினார்.

48 வயதான ஸ்டீவ் கீலர், கடந்த நான்கு ஆண்டுகளாக வலிமை பயிற்சி செய்து வருகிறார். ஸ்டீவ் தனது 18 வயதிலிருந்தே கராத்தே விளையாடி வந்தார். உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ஒரு செட் எடையை நடுவிரலால் மட்டும் தூக்கியுள்ளார். இதற்கு பிறகே கின்னஸ் உலக சாதனை படைக்க முடிவு செய்து தற்போது நிகழ்த்திக்காட்டியுள்ளார்.


Next Story