இஸ்ரேலில் 1 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டம்


இஸ்ரேலில் 1 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டம்
x

இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்றனர்.

ஜெருசலேம்,

இஸ்ரேலில் நீதித்துறைக்கும், அரசாங்கத்துக்கு இடையிலான அதிகாரங்களில் சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருவதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அறிவித்தார்.

இது நாட்டின் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என கூறி அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இருப்பினும் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இச்சட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எனினும் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டத்தை முழுமையாக கைவிடும்படி மக்கள் அங்கு வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன்படி நாடு முழுவதும் தொடர்ந்து 24-வது வாரமாக சுமார் 150 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி அவிக்டோர் லிபர்மேன் உள்பட சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டு நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story