பொது அறிவு கொண்ட சாதாரண நபர் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் - எலான் மஸ்க்


பொது அறிவு கொண்ட சாதாரண நபர் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் - எலான் மஸ்க்
x

கோப்புப்படம்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவதால் வருகிற நவம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மின்சார வாகன உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டெஸ்லா நிறுவனரும், உலக கோடீஸ்வரருமான எலான் மஸ்க் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், `பொது அறிவு கொண்ட ஒரு சாதாரண நபர் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story