கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர்: வடகொரியா எச்சரிக்கை


கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர்: வடகொரியா எச்சரிக்கை
x

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பியாங்யாங்,

கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ந்து தனது பாதுகாப்பு திறனை அதிகரித்து வந்தது. இதனை சமாளிப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை வடகொரியா கடுமையாக சாடியுள்ளது.

இந்தநிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, `தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத போர் ஏற்படும் சூழ்நிலைக்கு தள்ளுகின்றன. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை வடகொரியா இனியும் பொறுத்துக் கொள்ளாது. எனவே இதேநிலை தொடர்ந்தால் இதுவரை இல்லாத வகையில் அணு ஆயுத போர் நடைபெறும். அது பேரழிவு தரக்கூடியதாகவும், மீள முடியாததாகவும் இருக்கும்' என வடகொரியா எச்சரித்துள்ளது.


Next Story