போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைன் பயணம்


போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைன் பயணம்
x

போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.

கீவ்,

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்தது. இது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதி ரஷியா ஆரம்பம் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதன் முடிவில் உறுதியாக இருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது.

இந்த போர் தொடங்கி 1 வருடம் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் போருக்கு பின்னர் முதன்முறையாக உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் நேற்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றார். அங்கு அவர் நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார். போருக்கு பின்னர் இவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story