ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுவிப்பு...!


ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுவிப்பு...!
x

பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெற உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 73). 3 முறை பிரதமராக இருந்தவர். இவர் மீது தோஷகானா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இவருக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து 2020-ம் ஆண்டு அவரது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக 2019-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தார். பின்னர் அங்கேயே தலைமறைவான அவர் கடந்த மாதம் 21-ந்தேதி நாடு திரும்பினார். முன்னதாக அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டையும் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் ஆஜராகினார். கோர்ட்டில் அவர் ஆஜரானதால் தோஷகானா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அனைத்து சொத்துக்களையும் திரும்ப ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அவென்ஃபீல்ட் எனும் ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் நேற்று விடுவித்தது. இந்த தீர்ப்பை அமீா் ஃபரூக், மியான்குல் ஹஸன் ஔரங்கசீப் நீதிபதிகள் அடங்கிய அமா்வு வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் 12-ஆவது, 14-ஆவது மற்றும் 20-ஆவது பிரதமராக பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீஃப் (73), பனாமா ஆவண முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தால் கடந்த 2017-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டாா். பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story