'சிறார்களுக்கு பாலின மாற்று சிகிச்சை அளிக்கக் கூடாது' - டெக்சாஸ் மாகாணத்தில் சட்டம் நிறைவேற்றம்


சிறார்களுக்கு பாலின மாற்று சிகிச்சை அளிக்கக் கூடாது - டெக்சாஸ் மாகாணத்தில் சட்டம் நிறைவேற்றம்
x

Image Courtesy : AFP

சிறார்களுக்கு ஹார்மோன் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான டெக்சாஸ் மாகாணத்தில் சிறார்களுக்கு பாலின மாற்றும் சிகிச்சை அளிப்பதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தில் டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட் கையெழுத்திட்டார்.

அதன்படி டாக்டர்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவோ, அல்லது ஹார்மோன் மருந்துகளை பரிந்துரைக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலும் இந்த தடை சட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.Next Story