வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது- தென் கொரியா தகவல்


வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது- தென் கொரியா தகவல்
x

கோப்புப்படம் 

வடகொரியா இன்று ஒரு "குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சியோல்,

வடகொரியா இன்று குறைந்தபட்சம் ஒரு "குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் இராணுவ பதட்டங்கள் இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்துள்ளது.

ஏனெனில் வடகொரியா, முன் எப்போதும் இல்லாத வகையில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் அதன் அதிநவீன ஏவுகணையான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட பல ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் கூறுகையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து சகிக்க முடியாது என்று கூறினார். மேலும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் எப்போதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வடகொரியா உணரவேண்டும் என்றும் அவர் கூறினார்.


Next Story