நூற்றாண்டுகள் அல்ல... சில மணிநேரத்திலேயே உருவானது நிலவு; ஆய்வில் புது தகவல்


நூற்றாண்டுகள் அல்ல... சில மணிநேரத்திலேயே உருவானது நிலவு; ஆய்வில் புது தகவல்
x

நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்க அது, சில மணிநேரத்திலேயே உருவாகி விட்டது என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





நியூயார்க்,


பூமியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலவை பற்றி அமெரிக்கா, ரஷியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நிலவின் இருண்ட பக்கத்தில் என்ன உள்ளது என்று அறியும் ஆவலிலும் இந்த தேடல் அமைந்துள்ளது.

இதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் உள்ளன. எனினும், நிலவின் தோற்றம் பற்றி அறிவதில் ஆராய்ச்சியாளர்களின் தேடல் தொடர்ந்து வருகிறது.

நிலவு உருவாக பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும் என கூறப்படுகிற நிலையில், புதிய ஆய்வு ஒன்று அதனை மறுக்கும் வகையில் அமைந்து உள்ளது.




இந்த புதிய ஆய்வின்படி, பூமி மற்றும் செவ்வாய் கிரகம் அளவுள்ள தியியா என்ற திடப்பொருள் ஒன்று பெரிய அளவில் மோதியுள்ளன என்றும் அதனை தொடர்ந்து உடனடியாக நிலவானது அதனுடைய சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக துர்ஹாம் பல்கலை கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் கணினியை பயன்படுத்தி தூண்டுதல்களை உருவாக்கி நிலவின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த ஆய்வில், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்திருக்கும்? உள்ளிட்டவற்றை அறிவதற்காக, வெவ்வேறு மோதல் கோணங்கள், வேகம், கோளின் சுழற்சி, கோளின் நிறைகள் மற்றும் பிற விசயங்களை முன் வைத்து, நூற்றுக்கணக்கான மோதல்கள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கணினி வழியே தூண்டுதல்களாக பெறப்பட்டு உள்ளன.





இந்த கண்டுபிடிப்புகளின்படி, பெரிய அளவிலான மோதலானது, நிலவின் நிறை மற்றும் இரும்பு பொருட்களை உள்ளடக்கிய, அதனையொத்த மற்றொரு செயற்கைக்கோளை, பூமியின் ரோச் எல்லைக்கு வெளியே அதன் சுற்றுப்பாதையில் உடனடியாக நிலை நிறுத்த செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது.

செயற்கைக்கோள்கள் கூட, இந்த ரோச் எல்லையை கடந்த பின்னர், தப்பி பிழைத்து, நிலையான சுற்று வட்டப்பாதைகளில் பயணம் செய்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி நாசா அமைப்பு கூறும்போது, நிலவை பற்றி அறிந்து கொள்வது என்ற விசயங்களை கடந்து, இந்த ஆய்வுகள் ஆனது, தற்போது நாம் வாழ கூடிய தன்மை கொண்ட ஒன்றாக நமது சொந்த பூமியானது எப்படி உருமாறியது என்பது பற்றிய விவரங்களை நோக்கி நம்மை நெருங்கி அழைத்து சென்றுள்ளது என தெரிவித்து உள்ளது.

நிலவை பற்றி புதுப்புது கோட்பாடுகள் வெளிவந்து கொண்டு இருக்கும் சூழலில், மறுபுறம், நிலவுக்கு மீண்டும் செல்வதற்கு மனிதர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதனால், நிலவின் தோற்றம் பற்றிய புதிரை விடுவிப்பதில் நாம் இன்னும் சற்று நெருங்கியிருக்கிறோம்.


Next Story