சீனாவின் மிகப்பெரிய ரசாயன ஆலையில் தீ விபத்து


சீனாவின் மிகப்பெரிய ரசாயன ஆலையில் தீ விபத்து
x

Image Courtesy: AFP

சீனாவின் மிகப்பெரிய ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு ஆலையின் பல இடங்களில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

பீஜிங்,

சீனாவின் வர்த்தக தலைநகராக விளங்கும் ஷாங்காய் நகரில் பெட்ரோகெமிக்கல் என்கிற ரசாயன ஆலை உள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய ரசாயன ஆலை ஆகும். இந்த ஆலையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. ஒரே சமயத்தில் ஆலையின் பல இடங்களில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் ஷாங்காய் நகரின் வான் முழுவதும் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதையடுத்து 500க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த தீவிபத்தில் ஒருவர் உடல் கருகி பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

1 More update

Next Story