அரிய வகை மீன்..! ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பாகிஸ்தான் மீனவர்..!


அரிய வகை மீன்..! ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பாகிஸ்தான் மீனவர்..!
x

சோவா மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால், விலைமதிப்பற்றதாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது.

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த தனது தொழிலாளர்களுடன் கடந்த திங்கட்கிழமை அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்களின் வலையில் தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் சிக்கின.

பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ எடை மற்றும் 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

அந்த சோவா மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால், விலைமதிப்பற்றதாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் நோய்களை குணப்படுத்தும் திறன் பெற்றதாகும். குறிப்பாக, மீனில் உள்ள நூல் போன்ற ஒரு பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய அரிய வகை மீன்களை இன்று காலை கராச்சி துறைமுகத்தில் ஏலம் விட்டார் ஹாஜி. மொத்தம் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு மீன் மட்டும் சுமார் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இதன்மூலம் ஒரே நாள் இரவில் ஹாஜி கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். மீன்களை ஏலம் விட்டதன்மூலம் கிடைத்த பணத்தை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி தெரிவித்தார்.


Next Story